headlines

img

ஒப்புரவறிதல்

வான்மழை போன்று கைம்மாறு வேண்டார்
  உழைத்துச் சேர்த்தப் பொருள்கள் உதவும்!
தான்மிக உதவிடும் ஒப்புறவுப் பண்பினும்
  தகுதி உடையது வேறெதும் இல்லை!

பிறர்க்கு உதவும் ஒப்புர வுடையான்
  பிறவியில் உயிர்வாழ் பவனாம் பிறரோ
இறந்தவர் என்றே கருதப் படுவார்!
  இறக்கா திருக்க ஒப்புற வறிந்திடு!

பொதுநல நோக்குடன் வாழ்பவர் செல்வம்
   பயன்தரும் ஊருணி நீரைப் போன்றது!
பொதுநலப் பண்பு உடையார் செல்வம்
   பயன்மரம் உள்ளூர் பழுத்தது போன்றது!

பொதுநலப் பெருந்தகை சேர்த்திடும் செல்வம்
  போற்றிடும் மருத்துவ நோய்தீர் மரமே!
அதுநலம் கெட்டு வறுமை சூழினும்
  அளித்திடும் கடமை தவறா நிற்பர்!

பிறர்க்கு உதவி செய்வதே கடனென
  பிறந்தவன் வறுமை உற்றிடின் நிற்கும்!
பிறர்க்கு உதவினால் கேடு வந்திடில்
  பின்னும் விற்பான் தன்னை அதற்கு!

;